ஆடி கார் வாங்கிய அதிதி ராவ்

06.05.2022 09:23:57

மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் மற்றும் ஹே சினாமிகா போன்ற படங்களில் நடித்தவர் அதிதி ராவ் ஹைதாரி. தற்போது ஜூபிலி என்ற வெப்தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடி கார் ஒன்றை வாங்கி இருக்கிறார் அதிதி.

இந்த தகவலை மும்பை ஆடி கார் நிறுவனம் சோசியல் மீடியாவில் புகைப்படத்துடன் வெளியிட்டு இருக்கிறது. அதோடு ஆடி கார் குடும்பத்தில் அதிதியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம், வாழ்த்துக்கள் என்றும் அவர்கள் பதிவிட்டு உள்ளார்கள். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது.