சிறிலங்காவுக்கான புதிய வெளிநாட்டு தூதுவர்கள் இருவர் இருவர் நியமனம்..!

17.09.2022 00:05:00

சிறிலங்காவுக்கான புதிய வெளிநாட்டு தூதுவர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவுக்கான நெதர்லாந்து மற்றும் சவூதி ஆகிய நாடுகளின் தூதுவர்கள் இவ்வேறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்ட நற்சான்றிதழ்கள்

சிறிலங்காவுக்கான வெளிநாட்டு தூதுவர்கள் இருவர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதிபர் அலுவலகத்தில், அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் அவர்கள் தமது நற்சான்றிதழ்களை கையளித்துள்ளனர்.

இதற்கமைய, சிறிலங்காவுக்கான நெதர்லாந்து தூதுவராக பொனி ஓர்பாக் (Bonnie Horbach) நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், சிறிலங்காவுக்கான சவூதி தூதுவராக காலித்ஹமூட் நஸார் அல்தஸான் அல்கஹ்தானி (Kahalid Hamoud Nasser Aldasan Alkahtani ) அண்மையில் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.