24 மணித்தியாலத்தில் 529 சாரதிகள் கைது!

02.01.2025 08:20:42

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 529 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசேட போக்குவரத்து நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையான கைதுகள் இவையென பொலிஸார் தெரிவித்தனர்.

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்தி தற்போது வரை 7,264 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது