இரண்டு மசோதாக்களை நிறைவேற்றம் ஜேர்மன்!

30.05.2025 08:04:03

கேபினட், புலம்பெயர்தலுக்கு எதிரான இரண்டு மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. Alexander Dobrindt என்பவர் family reunification என்னும் நடைமுறையை கட்டுப்படுத்தும் மசோதா ஒன்றை முன்வைத்திருந்தார். அது, ஜேர்மனியில் இருக்கும் அகதிகள் நிலை பெற தகுதியற்ற, அதே நேரத்தில், தங்கள் நாட்டுக்கு திரும்பி சென்றால் ஆபத்து என்பதால் ஜேர்மனியில் வாழ அனுமதியளிக்கப்பட்டுள்ள, subsidiary protection status என்னும் நிலையிலிருக்கும் புலம்பெயர்ந்தோரின் குடும்பத்தினர், ஜேர்மனிக்கு வந்து தங்கள் குடும்பத்தினருடன் இணைந்துகொள்வதற்கு தடை விதிக்கும் மசோதா ஆகும்.

மேலும், ஜேர்மனியுடன் ஒருங்கிணைந்து வாழும் வெளிநாட்டவர்கள் மூன்று ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்தாலே குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் மசோதா ஒன்றும் முன்வைக்கப்பட்டது. அந்த இரண்டு மசோதாக்களுக்கும் ஜேர்மன் கேபினட் ஒப்புதலளித்துள்ளது.