தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்!!

12.01.2022 05:26:23

தமிழ்நாட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.

விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர் ,ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன.  புதிய 11 மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் ஆயிரத்து 450 இடங்கள் உள்ளன.