அரசைப் பாதுகாக்கும் சட்டம் எதற்கு?
|
பயங்கரவாதிகளாக இருந்தவர்கள் ஆட்சிசெய்யும் நாட்டில் பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எதற்கு? இந்தச் சட்டம் நிறைவேற்றப் பட்டால், 6 மாதங்களில் கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு ஏற்பட்டதைவிட மோசமான நிலைமையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படுமென புதிய ஜனநாயக முன்னணி எம்.பி. சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார். |
|
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி பொருளாதாரம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு சாடிய அவர் மேலும் பேசுகையில், அரசாங்கம் பயங்கரவாதத்திலிருந்து நாட்டை பாதுகாக்கும் சட்டமூலத்தை சமர்ப்பித்திருக்கிறது. ஆனால் பயங்கரவாதத் தில் இருந்து அரசை பாதுகாப்பதற்கு சட்டம் கொண்டுவந்து பயனில்லை. ஏனெனில் இந்த அரசாங்கத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்கள். 88,89 காலப்பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புபட்ட அதிகமானவர்கள் இந்த அரசாங்கத்தில் இருக்கிறார்கள். ஜனாதிபதி முதல் அதிகமானவர்கள் பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்களே. இவர்கள்தான் தற்போது ஆட்சி செய்து வருகிறார்கள். இராணுவ முகாம், பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களே ஆட்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்கு சட்டம் எதற்கு? |