விவாகரத்து காரணம்?

18.09.2022 10:50:27

சீதா-பார்த்திபன் 

சினிமா பிரபலங்களில் நிஜ வாழ்க்கையில் ஜோடி சேருபவர்களை மக்கள் எப்போதுமே ஸ்பெஷலாக கொண்டாடுவார்கள். அப்படி மக்கள் பெரிதாக எதிர்ப்பார்க்க ஜோடி சேர்ந்தவர்கள் தான் பார்த்திபன் மற்றும் சீதா.

1990ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது, குழந்தைகளையும் பெற்றார்கள், ஆனால் 2001ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றார்கள்.

அதன்பிறகு சீதா இரண்டாவதாக சீரியல் நடிகரை திருமணம் செய்ய இப்போது அவரையும் பிரிந்துவிட்டார். நடிகர் பார்த்திபன் மட்டும் மறுமணம் செய்யாமல் குழந்தையுடன் வசித்து வந்தார்.

விவாகரத்து காரணம்

இப்போது விவாகரத்து கிடைத்து பல வருடங்களுக்கு பிறகு பார்த்திபனுடன் விவாகரத்து பெற்றது குறித்து பேசியுள்ளார் சீதா. அதில் அவர், என்னிடம் இருந்தது எதிர்பார்ப்பு மட்டுமே. எனக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்பதுதான் அந்த எதிர்பார்ப்பு.

அது பூர்த்தி ஆகாததால் தான் விவாகரத்தை பெற்றேன் என்று சீதா கூறியுள்ளார்.