மூத்த ஊடகவியலாளர் சபேசனுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி!
12.08.2026 15:19:00
|
மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் (சபேசன்) உடலுக்கு யாழ். ஊடக அமையத்திலும், யாழ். தினக்குரல் பத்திரிகை அலுவலகத்திலும் நேற்றிரவு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. |
|
யாழ். ஊடக அமையத்தின் தலைவராகவும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியராகவும் பதவிவகித்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன், உடல்நலக்குறைவு காரணமாக, 46 வயதில், கடந்த மாதம் 29 ஆம் திகதி கனடாவில் காலமானார். அவரது உடல் நேற்று இரவு இரவு யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்டு, இரண்டு ஊடக மையங்களிலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஊடகவியலாளர்கள், ஊடக பணியாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டு சபேசனின் புகழுடலுக்கு அஞ்சலியை செலுத்தினர். |