உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸை கண்டறிய ஆய்வகம்

14.09.2021 10:25:13

உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸை கண்டறிய சென்னையில் புதிய ஆய்வகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். 

டி.எம்.எஸ் வளாகத்தில் ரூ.4 கோடியில் அமைக்கப்பட்ட புதிய ஆய்வகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தார். 

இந்தியாவில் கொரோனா வைரஸின் உருமாற்றத்தை கண்டறிய 11-வது ஆய்வகமாக சென்னை ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.