இந்தியாவில் ஆட்சி மாற்றம் தேர்தல் மூலம் மட்டுமே சாத்தியம்:

18.10.2026 13:34:43

வங்கதேசம் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் நடைபெற்றதை போன்ற வன்முறை சதித்திட்டங்கள் இந்தியாவில் அரங்கேற்றப்படுவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டியுள்ளார். 

இந்தியாவின் ஆட்சியை மாற்ற வேண்டும் என்றால் அது தேர்தல் மூலமாக மட்டுமே சாத்தியமே தவிர, குறுக்கு வழியிலும் சதித்திட்டங்கள் மூலமாகவும் நடக்காது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டங்களின் போது மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் 'ஆட்சி மாற்றம்' குறித்துப் பேசியது அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரசாந்த் பூஷனின் இந்த கருத்துக்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டின் இளைஞர்களின் சக்தியை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் வங்கதேச பாணியில் குழப்பத்தை விளைவிக்க முயல்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.