ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா

24.11.2024 08:38:26

முன்னாள் முதலமைச்சர் ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, அதிமுக சார்பில் இன்று  கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காணொளி ஒளிபரப்பாகி உள்ளது. அவர் தனது வாழ்த்துக்களை அதில் தெரிவித்துள்ளார்.
 

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் மனைவியான ஜானகியின் நூற்றாண்டு விழா, அதிமுக சார்பில் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாபதி வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், ஜானகியுடன் பயணம் செய்தவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
 

இந்த விழாவுக்காக ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவிக்க காணொளி மூலம் பேசினார். அதில் அவர் கூறியது: "ஜானகி அவர்கள் மிகுந்த தைரியத்துடன் முடிவெடுப்பவர். யாருடைய ஆலோசனையும் கேட்காமல், 'அரசியல் எனக்கு சரி வராது; நீங்கள் தான் சரியானவர்' என்று முடிவு செய்து, ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்தார். அது அவரது மிகப் பெரிய குணம். அவரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவதை வரவேற்கிறேன். இந்த விழாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!"