அளவெட்டியில் கட்டிடம் இடிந்து வீழ்ந்து குடும்பஸ்தர் பலி
25.01.2021 09:17:15
அளவெட்டி ப் ப கு தி யி ல் அமைந்திருந்த ஒரு பழைய
கட்டிடத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மீது
கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் அவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் அளவெட்டி மேற்கைச் சேர்ந்த மகாதேவன்
பிரகலாதன் (வயது 40) என்னும் குடும்பஸ்தரே உயிரிழந்தவரா
வார்.
நேற்று மாலை 4.00 மணியளவில் குறித்த அனர்த்தம் இடம்
பெற்றுள்ளது.பாதிக்கப்பட்டவர் உடனடியாக தெல்லிப்பழை ஆதார
வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதிலும் வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போதே உயிரிழந்திருந்ததை மருத்துவர்கள் உறுதி செய்த நிலையில் தெல்லிப்பழைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.