ஒரு தங்கத்தால் உச்சம் சென்ற நீரஜ் சோப்ரா

14.08.2021 09:24:14

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, உலக தரவரிசைப் பட்டியலில் 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஒலிம்பிக்ஸ் போட்டியில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டியை எரிந்து இந்தியாவின் நீரஜ் தங்க பதக்கத்தை கைப்பற்றி சாதனைப் படைத்தார்.

இதையடுத்து சர்வ்தேச ஈட்டி எறிதல் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 1315 புள்ளிகள் பெற்று நீரஜ் சோப்ரா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு முன்பு 16வது இடத்தில் இருந்த நீரஜ், தங்கம் வென்றதன் மூலம் 14 இடங்கள் முன்னேறி 2வது இடத்தை பிடித்துள்ளார்.

தர்வரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த ஜோஹான்ஸ் வெட்டர் உள்ளார். அவர் பெற்றுள்ள மொத்த புள்ளிகள் 1,396 ஆகும். சர்வதேச ஈட்டி எறிதல் வீரர்களின் தரவரிசைப் பட்டியலில் 3வது இடத்தில் போலாந்து நாட்டின் Marcin Krukowski உள்ளார்.

இதனிடையே இன்ஸ்டாகிராமில் நீர்ஜ் சோப்ராவுக்கு 1.43 லட்சம் ஃபாலோவர்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக இருந்தனர். ஆனால், தங்கம் வென்றபின் நீரஜ் சோப்ராவை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 32 லட்சமாக அதிகரித்துள்ளது. உலகளவில் டிராக் பீல்ட் தடகளவீரர்களில் அதிக அளவு ஃபாலோவர்ஸ் கொண்டவர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுவிட்டார்.