ஜனநாயகன் படப்பிடிப்பில் பெரிய மாற்றம்!

11.08.2025 07:10:00

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த மாதம் ஒரே கொண்டாட்டம் தான். காரணம் இந்திய சினிமா கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளது. ப்ரீ புக்கிங் தாறுமாறாக நடந்து வர பல தனியார் நிறுவனங்கள் அன்று விடுதலை அளித்து வருகிறார்கள். ரஜினி படங்களுக்கு இப்படி நடப்பது ஒன்றும் புதியதும் இல்லை. இப்போதே முன்பதிவில் பல சாதனைகளை புரிய தொடங்கிவிட்டது ரஜினியின் கூலி.

அடுத்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை புரிய தயாராகி வருகிறது விஜய்யின் ஜனநாயகன்.

கோடான கோடி ரசிகர்களின் மனதில் வாழும் விஜய் இந்த ஜனநாயகன் படத்துடன் சினிமாவில் இருந்து விலகிவதாக கூறிவிட்டார். எனவே கடைசியாக விஜய்யை திரையில் காண ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படத்தில் பூஜா ஹெட்ச், பாபி தியோல் என பலர் நடிக்கிறார்கள்.

அண்மையில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் ஒரு பேட்டியில் விஜய்யின் ஜனநாயகன் படம் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், விஜய் மிகப்பெரிய ஸ்டார், அவருடன் நடிக்கிறேன் என்று சொன்னதும் படப்பிடிப்பு எங்கு நடக்கிறது என்றுதான் பலரும் கேட்டார்கள்.

விஜய் ஒரு இடத்திற்கு சென்றால் அவரை பார்க்க ஏராளமானோர் கூடிவிடுகிறார்கள்.

எனவே படப்பிடிப்பு ஒழுங்காக நடத்த முடியாமல் போகும் என்பதால் லைவ் லொகேஷனில் நடத்துவதைவிட செட்டில் நடத்தினால் நல்லது என சொன்னார்கள். அந்த அளவுக்கு விஜய் கொண்டாடப்படுகிறார் என கூறியுள்ளார்.