தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 637 பேர் கைது
09.09.2021 05:37:13
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மேலும் 637 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 41 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 67,979 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே மேல் மாகாணத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 13 சாலைத் தடுப்புகளில் நேற்று 1,085 வாகனங்களில் பயணம் செய்த 1,895 நபர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.