ஈராக்கில் பல்பொருள் அங்காடியில் தீ விபத்து.

17.07.2025 12:07:41

ஈராக்கில் உள்ள மிகப்பெரிய பல்பொருள் அங்காடியொன்றில்  ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கிழக்கு ஈராக்கில் உள்ள அல்-குட் நகரில், உள்ள பல்பொருள் அங்காடியொன்றின் 5 ஆவது மாடியிலேயே குறித்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் பலர்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் பலரது  நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என  அஞ்சப்படுகிறது. இதேவேளை குறித்த  தீ விபத்திற்கான காரணம் மற்றும் தீ விபத்தினால் ஏற்பட்ட சேத விபரம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.