
தேர்தலில் பெரும்பான்மையை இழந்த ஆளும் கூட்டணி!
ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற ஜப்பானின் மேல்சபைத் தேர்தலில், தீவிர வலதுசாரி சான்சீட்டோ கட்சி மிகப்பெரிய வெற்றியாளர்களில் ஒன்றாக உருவெடுத்தது.
குடியேற்ற எதிர்ப்பு கொள்கைள், வரி குறைப்புகள் மற்றும் நலன்புரி செலவினங்களுக்கான உறுதிமொழிகளுடன் இந்த ஆதரவு அவர்களுக்கு கிடைத்தது.
அதேநேரம், ஜப்பானின் ஆளும் கூட்டணி நாட்டின் மேல் சபையில் பெரும்பான்மையை இழந்துவிட்டது.
ஆனால், பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தத் தேர்தலுக்கு வாக்காளர்கள் கடும் போட்டியை எதிர்கொண்டனர்.
விலைவாசி உயர்வு மற்றும் அமெரிக்க வரி அச்சுறுத்தல் காரணமாக லிபரல் டெமாக்ரடிக் கட்சி (LDP) மற்றும் அதன் இளைய பங்காளியான கோமெய்ட்டோ கூட்டணி மீது விரக்தியடைந்த நிலையில் இந்த தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் வாக்கெடுப்பு முடிந்த பின்னர் பேசிய பிரதமர், “கடுமையான முடிவை” “மனப்பூர்வமாக” ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் தனது கவனம் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் மட்டுமே இருந்தது என்றார்.
இந்த இழப்பு இஷிபாவின் கூட்டணிக்கு மற்றொரு அடியாகும்.
கூட்டணி கடந்த ஒக்டோபர் மாதம் கீழ்சபைத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இரு அவைகளிலும் சிறுபான்மையினராக மாறியது.
மேலும், ஜப்பானின் அரசியல் உறுதியற்ற தன்மையை மோசமாக்கியது.
1955 இல் கட்சி நிறுவப்பட்டதிலிருந்து லிபரல் டெமாக்ரடிக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழப்பது இதுவே முதல் முறை.
248 இடங்களைக் கொண்ட மேல் சபையின் கட்டுப்பாட்டைத் தக்கவைக்க ஆளும் கூட்டணிக்கு 50 இடங்கள் தேவைப்பட்டன.
ஆனால், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட வேண்டிய ஒரே ஒரு இடம் மாத்திரம் உள்ள நிலையில், கூட்டணி 47 இடங்களைப் பிடித்தது என்று பொது ஒளிபரப்பாளரான NHK தெரிவித்துள்ளது.
ஜப்பானின் காண்டா சர்வதேச ஆய்வுகள் பல்கலைக்கழகத்தில் ஜப்பானிய ஆய்வுகள் விரிவுரையாளரான ஜெஃப்ரி ஹால், வலதுசாரி கட்சிகளுக்கான ஆதரவு, லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் பழமைவாத ஆதரவு தளத்தை குறைத்துவிட்டதாகக் கூறினார்.
ஷின்சோ அபே முன்னர் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராக இருந்தார்.
மேலும் ஜப்பானின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தார்.
2006 மற்றும் 2007 க்கு இடையில் இரண்டு முறையும், 2012 மற்றும் 2020 க்கு இடையில் இரண்டு முறையும் பதவியில் இருந்தார்.
எவ்வாறெனினும், பொருளாதாரத் தடைகள், வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு எதிராக ஜப்பான் போராடும் போது நம்பிக்கையை ஊக்குவிக்க போராடிய இஷிபா மீதான வாக்காளர்களின் விரக்தியை இந்த தேர்தல் முடிவு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.