மலையாள பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் சீன். இந்த படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதால் படத்திற்கு நல்ல வசூலும் கிடைத்து வருகிறது.
 

இதுவரை ஏற்காத ஒரு கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருக்கிறார். மேலும் மலையாள பட இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஸ்டைலில் ஒரு சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக சூர்யா நடித்திருக்கிறார்.

படத்தில் சில குறைகள் இருந்தாலும் படம் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் வந்ததால் கடந்த படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகிவிட்ட நிலையில் சீன் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.116 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.63 கோடி வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.