எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

31.01.2024 17:43:37

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில்  மாற்றம் செய்யப்படவுள்ளது.


அதன்படி சிபெட்கோ எரிபொருள் நிலையத்தில்  ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 371 ரூபாவாக விற்பனையாகவுள்ளது.

அத்துடன் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாயினால் குறைக்கப்பட்டு  புதிய விலை 456 ரூபாவாகும்.

அத்தோடு ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை, 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்  புதிய விலை 363 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 26 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்  புதிய விலை 262 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.