
மாவை சேனாதிராஜா காலமானார்!
30.01.2025 08:15:31
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா நேற்றிரவு காலமானார். மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 10 மணியளவில் மரணமானார். |
1942 ஒக்டோபர் 27 ம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா தனது 82 வது வயதில் காலமானார். அவரது மரணம் அறிந்து பல்வேறு அரசியல் பிரமுகர்களும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். இதன்படி மாவை சேனாதிராஜாவின் புகழுடலை குடும்பத்தாரின் அனுமதிக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர்சிறீதரன் பொறுப்பேற்றுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 02/02/2025, ஞாயிற்றுகிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் அன்னாரின் இல்லத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |