
உலகின் விலை உயர்ந்த & மலிவான நகரங்களில் 2 இந்திய நகரங்கள் !
உலகின் விலையுயர்ந்த மற்றும் மலிவான நகரங்கள் பட்டியலை எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது இதில் இந்திய நகரங்கள் எங்கே உள்ளது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் எந்த நகரங்களில் வாழ்ந்தால் எவ்வளவு செலவாகும் என்பதைக் கணக்கிட்டு, உலகின் டாப் விலை உயர்ந்த மற்றும் மலிவான நகரங்கள் பட்டியலை எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்த சர்வேப்படி சிரியாவின் டமாஸ்கஸ் இந்த ஆண்டு வாழ்வதற்கு மலிவான நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. ஈரானின் தெஹ்ரான் 2வது இடத்தில் இருக்கும் நிலையில், லிபியாவின் திரிபோலி 3இவது இடத்திலும் இருக்கிறது.
இந்த லிஸ்டில் பாகிஸ்தானின் கராச்சி, உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் மற்றும் துனிசியாவின் துனிஸ், ஜாம்பியாவின் லூசாகா ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறது. இந்த மலிவான நகரங்கள் லிஸ்டில் அகமதாபாத் மற்றும் சென்னை ஆகியவை முறையே 8வது மற்றும் 10வது இடங்களைப் பிடித்துள்ளது.