
தமிழரசும் கூட்டுக்கு வர வேண்டும்.
ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும்என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
கூட்டு முயற்சிக்கு வருவதன் ஊடாக தமிழரசுகட்சிக்கு தேவைப்படுகின்ற சபைகளின் பதவிகளை நாங்கள் உறுதிப்படுத்த தயார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியும் தமிழ்தேசிய பேரவையும் கொள்கை ரீதியிலான ஒரு நிலைப்பாட்டிற்கு வந்திருக்கின்றன , நாங்கள் இணங்கியமைக்கான பிரதான காரணம் உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்தேசியத்திற்கான ஒரு பெரும் ஆணையை வழங்கியிருந்தார்கள். தனித்தனியாக எந்தவொரு கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மையை எந்தவொரு சபையிலும் வழங்கியிருக்காவிட்டாலும், தமிழ்தேசிய தரப்பிற்கு தங்கள் ஆணையை வழங்கியிருந்தார்கள் தமிழ்தேசியம் பேசி வாக்குகளைகோரிய ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்தேசிய பேரவை தமிழரசுக்கட்சிக்கு மிகப்பெரிய பெரும்பான்மை வாக்குகளை மக்கள் வழங்கியிருந்தார்கள். ஆகவே உண்மையிலே நடக்கவேண்டியது என்னவென்றால் ,எவ்வாறு தமிழரசுக்கட்சியும்ஜனநாயக தேசிய கூட்டணியும் கொள்கை ரீதியான இணக்கப்பாட்டிற்கு வந்தனவோ அதேபோன்று,தமிழரசுக்கட்சியும் அந்த இணக்கப்பாட்டிற்கு வந்து அதன் ஊடாக ஒவ்வொரு சபையிலும் ஒரு ஸ்திரதன்மையை உருவாக்குவதுதான் பொருத்தமாகயிருக்குமே தவிர,அதனை விட்டுவிட்டு மக்கள் வழங்கிய ஆணைக்கு நேர்மாறாக, செயற்படுகின்ற தரப்புகளுடன் கூட்டு சேர்வதும், அதுவும் தமிழ் தேசியத்துடன் இருக்ககூடிய ஏற்கனவே இருக்ககூடிய ஒரு பலமான கூட்டை தோற்கடிப்பது அதற்காக செயற்படுவது உண்மையிலே பொருத்தமற்றது. இது தமிழ்தேசியத்திற்கு ஒரு பாரிய ஏமாற்றத்தை அளிக்கும், மக்களிற்கும் ஒரு பாரிய ஏமாற்றத்தை அளிக்கும். எம்மை பொறுத்தவரையில் நாங்கள் இந்த கூட்டில் கைச்சாத்திட்டவேளை இலங்கை தமிழரசுக்கட்சிக்கு பகிரங்கமாக ஒரு கோரிக்கை விடுத்திருந்தோம்,எங்கள் கதவுகள் திறந்துதான் இருக்கின்றது, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியும் தமிழ்தேசிய பேரவையும் ஒன்றிணைந்து இருப்பது,இது தமிழரசுக்கட்சியை ஓரங்கட்டுவதற்காக செய்யப்பட்ட ஒரு கூட்டல்ல, மாறாக, இந்த கூட்டின் ஒப்பந்தத்தை படித்து, எவரும் பிழைகண்டுபிடிக்க முடியாத வகையிலேயே அந்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டுள்ளது, ஆகவே தமிழரசுகட்சி அதனை ஏற்றுக்கொள்வதற்கு எந்த விதமான தயக்கம் இருக்க முடியாது. உண்மையிலே தமிழ்தேசியத்தை நேசித்து அதற்கு நேர்மையாக நடப்பதாகயிருந்தால் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு விடயத்தையும் எதிர்க்க முடியாத நிராகரிக்க முடியாத நிலைதான் இருக்கின்றது. இண்டைக்கும் நாங்கள் கேட்கின்றோம், ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட அந்த ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும். கூட்டு முயற்சிக்கு வருவதன் ஊடாக தமிழரசுகட்சிக்கு தேவைப்படுகின்ற சபைகளின் பதவிகளை நாங்கள் உறுதிப்படுத்த தயார். இலங்கை தமிழரசுக்கட்சி ஈபிடிபி கூட்டை நியாயப்படுத்துவதற்காக எங்கள் கூட்டணியிலிருந்து ஒரு சிலர் குறிப்பாக சுரேஸ்பிரேமசந்திரனும் சித்தார்த்தனும் ஈபிடியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கப்போவதாகவும், அவர்களின் ஆதரவை ஆட்சியமைப்பதற்கு கோருவதற்கு நாங்கள் ஒரு சிலர் நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. எங்கள் கூட்டணியிலிருந்து ஒரு சிலர் குறிப்பாக சுரேஸ்பிரேமசந்திரனும் சித்தார்த்தனும் ஈபிடியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கப்போவதாகவும்,அவர்களின் ஆதரவை ஆட்சியமைப்பதற்கு கோருவதற்கு நாங்கள் ஒரு சிலர் நடவடிக்கை எடுத்திருந்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அந்த செய்தி முற்றிலும் தவறானது.பொய்யான செய்தி , அந்த செய்தி திட்டமிட்ட வகையிலே ,ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும்,தமிழ்தேசிய பேரவைக்கும் இடையில் நடைபெற்ற, கொள்கைரீதியிலான ஒப்பந்தத்தை கொச்சை படுத்துவதற்காக திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய்யான அந்த செய்தியை நாங்கள் நிராகரிக்கின்றோம், கண்டிக்கின்றோம். இன்றைக்கு எங்களிற்கு நன்றாக தெரியக்கூடியதாகவுள்ளது என்னவென்றால் , அந்த செய்தி நன்கு திட்டமிடப்பட்டு பரப்பப்பட்டமைக்கான காரணம், தமிழரசுக்கட்சி ஈபிடிபியின் தலைவரை சந்திப்பதற்கு முடிவெடுத்திருந்த ஒரு நிலையில், அந்த பொய்ச்செய்தியை பரப்பிய ஊடகங்கள் தமிழரசுக்கட்சிக்கு மிகவும் விசுவாசமாக செயற்படுவதனால்,தமிழரசுக்கட்சி ஈபிடிபியுடன் நடத்தவிருக்கின்ற சந்திப்பையும் அவர்களின் அந்த கூட்டையும் நியாயப்படுத்துவதற்காக தமிழ்தேசிய பேரவையும் ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியும் கூட ஈபிடிபியுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு தயாராகியிருந்தன , தமிழரசும் அதைத்தான் செய்தது , ஆனால் ஈபிடிபி இறுதியில் வந்து தமிழரசுடன் விரும்பியது என்பதை சுட்டிக்காட்டி அந்த கூட்டை நியாயப்படுத்துவதற்காக திட்டமிட்டு பரப்பப்பட்ட செய்தியாகும். |