த. வெ. கமுதன்முறையாக 2026ம் ஆண்டு தேர்தலை சந்திக்க உள்ளது.

22.01.2026 14:23:00

பல கோடி வருமானம் பார்க்கும் சினிமா துறையை விட்டுவிட்டு இதுநாள் வரை தனக்கு துணையாக இருந்த ரசிகர்களுக்காக தமிழக மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என அரசியலில் நுழைந்துள்ளார் நடிகர் விஜய். சில லருடங்களாக கட்சி வேலையில் இருந்தவர் நான் கடைசியாக நடிப்பதாக இருந்த ஜனநாயகன் படத்தையும் வெற்றிகரமாக நடித்து முடித்தார். நடிகர் விஜய்யின் ரசிகர்கள் 2026ம் வருட பொங்கலை ஜனநாயகன் பொங்கலாக கொண்டாடலாம் என இருந்தனர்.

ஆனால் அவர்களுக்கு கடைசியில் ஏமாற்றம் தான், இப்போது வரை ஜனநாயகன் படம் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை.

நடிகர் விஜய்யின் ரசிகர்களுக்கு ஜனநாயகன் வராதது சோக செய்தி என்றாலும் அரசியல்வாதி விஜய் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி வந்துள்ளது.

அதாவது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக 2026ம் ஆண்டு தேர்தலை சந்திக்க உள்ளது. இதனால் இந்திய தேர்தல் ஆணையம் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளனர்.

இந்த விஷயம் கேள்விப்பட்ட ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் விசில் சத்தம் எழுப்பி வருகின்றனர்.