சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு !
கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தரவரிசைப் பட்டியலில், இந்தியா அணி 24 போட்டிகளில் விளையாடி 121 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.
நியூஸிலாந்து 18 போட்டிகளில் விளையாடி 120 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து அணி 32 போட்டிகளில் விளையாடி 109 புள்ளிகளுடன் ஒரு இடம் ஏற்றம் கண்டு மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 17 போட்டிகளில் விளையாடி 108 புள்ளிகளுடன் ஒரு இடம் பின்தள்ளப்பட்டு நான்காவது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் 24 போட்டிகளில் விளையாடி 94 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் மேற்கிந்திய தீவுகள் அணி 84 புள்ளிகளுடன் இரண்டு இடங்கள் ஏற்றம் கண்டு ஆறாவது இடத்திலும் உள்ளன.
தென்னாபிரிக்கா அணி ஒரு இடம் சரிந்து 80 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தையும் இலங்கை அணி ஒரு இடம் சரிந்து 78 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தையும் பிடித்துள்ள.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, 46 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும், சிம்பாப்வே அணி 35 புள்ளிகளுடன் பத்தாவது இடத்திலும் உள்ளன.