இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
26.10.2021 07:17:06
முல்லேரியா பொலிஸ் பிரிவில் மீகஹாவத்த பகுதியில் இன்று (26) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் 42 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர், 45 வயதுடைய மற்றுமொரு நபர் படுகாயமடைந்துள்ளாக கூறினார்.
படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.