மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

06.01.2021 07:00:20

 

தி.மு.க-வின் மக்கள் கிராம சபை கூட்டத்தால் பலனில்லை என முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

முதலமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டத்தில் இன்றும் நாளையும் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதல் கட்டமாக இன்று காலை பவானியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: 

தி.மு.க-வின் மக்கள் கிராம சபை  கூட்டத்தால் பலனில்லை. வேளாண் பணி சிறந்து விளங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தி.மு.க-வின் மக்கள் கிராம சபை  கூட்டத்தால் பலனில்லை. 

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. கிராம சபை கூட்டத்தின் மூலம் மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின். அரசு, முதலமைச்சரை குறை சொல்வதே ஸ்டாலினின் வாடிக்கை” என்றார்.