செல்வம் அடைக்கலநாதனுக்கு கொலை மிரட்டல்.
04.11.2025 13:20:00
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இன்று அவர் செய்த முறைப்பாட்டின்படி, கனடாவில் வசிக்கும் ஒருவர் தொலைபேசியில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.