ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசத்தல்: பிரதமர் பாராட்டு
டோக்கியோவி்ல் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியி்ல் பாட்மின்டன் பிரிவில் இந்திய அணி வீரர் சுஹாஸ் லாலினகேரே யாதிராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
டோக்கியோவில் கடந்த மாதம் தொடங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டி இன்றுடன் முடிகிறது. கடைசி நாளான இன்று ஆடவருக்கான எஸ்எல்-4 பிரிவில் பாட்மின்டனுக்கான இறுதி ஆட்டம் நடந்தது.
இதில் இந்திய வீரர் சுஹாஸை எதிர்கொண்டார் பிரான்ஸ் வீரர் லூகாஸ் மசூர். உலகின் நம்பர் ஒன் வீரரான லூகாஸ் மசூருக்கு ஈடுகொடுத்து விளையாடிய சுஹாஸ் போராடித் தோல்வி அடைந்தார். 62 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சுஹாஸை 21-15, 17-21, 15-21 என்ற செட்களில் தோற்கடித்தார் லூகாஸ் மசூர்.
உத்தரப்பிரதேசம் கவுதம் புத்தநகர் மாவட்ட கலெக்டராக 38வயதான சுஹால் பணியாற்றி வருகிறார். பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுஹாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.