மலேசியாவுடனான பேச்சு வார்த்தை வெற்றி!

04.07.2022 09:36:39

மலேசிய எரிபொருள் நிறுவனத்திடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கான பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி 50,000 மெற்றிக் தொன் பெற்றோல் மற்றும் 10,000 மெற்றிக் தொன் மண்ணெண்ணெய் என்பன எதிர்வரும் ஜுலை மாதம் 10 அல்லது 11 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளதாக அமைச்சர் கூறினார்.