மகா மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா

07.08.2023 10:30:03

மேட்டுகாளிங்கராயநல்லூர் மகா மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்றது அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் நடைபெற்றது அகரம்சீகூர், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள மேட்டுகாளிங்கராயநல்லூர் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து மேட்டுகாளிங்கராயநல்லூர் பொதுமக்கள் சின்னாற்றில் இருந்து பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் ஊர்வலமாக அம்மன் சன்னிதானத்தை வந்தடைந்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினார்கள்.இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.