போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை விரட்டியடிக்கவும் தயார் !
அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைதியான அகிம்சைவாத மக்களை, பாதுகாப்பு தரப்பினரை பயன்படுத்தி தாக்கவும், அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை விரட்டியடிக்கவும் தயார் நிலைகள் காணப்படுவதாகத் முன்னாள் இராணுவத் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் தனக்கு நம்பிக்கையான தரப்பில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றையும் இட்டுள்ளார். இதனால், போராட்டகாரர்கள் ஒன்றிணைந்து இந்த முயற்சியை தோற்டிக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
போராட்டகாரர்களே, ஒன்றிணையுங்கள். அணி திரளுங்கள். மக்களின் உரிமைகளை அடக்குமுறையாலும் காவல்துறை பலத்தாலும் தோற்கடிக்கும் முயற்சிக்கு எதிராக செயற்படுங்கள் என சரத் பொன்சேகா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு எதிரில் மைனா கோ கம என பெயரிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் சிலர் உணவு தவிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்