அரசியல்கைதிகளை அரசாங்கம் விடுவிக்கத் தவறும் பட்சத்தில் சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்வோம் !

12.09.2021 14:31:24

தமிழ் அரசியல்கைதிகளை ராஜபக்ஷ அரசாங்கம் விடுவிக்கத் தவறும் பட்சத்தில் நாங்கள் சர்தேசத்திற்கு இந்தப் பிரச்சனையினை எடுத்துச் செல்வோம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு யாழில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் இதனைத் தெரிவித்திருந்தார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,

நாட்டிலுள்ள 26 சிறைச்சாலைகளில் சுமார் 20228 கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். உண்மையில் நாட்டினுடைய சிறைக்கட்டமைப்பின் பிரகாரம் சுமார் 12 ஆயிரம் கைதிகளை மாத்திரமே தடுத்து வைத்துப் பராமரிக்க முடியும் என சிறைத்துறை தலைமையகம் தெரிவிக்கின்றது.

நாட்டுக்குள் அன்றாடம் அதிகரித்துச்செல்கின்ற குற்றச்செயல்கள் காரணமாகவே சிறைக்கூடங்கள் நிரம்புவதாக கூறிவிட்டு வெறுமனே ஒதுங்கிவிட முடியாது.