முற்றாக முடங்கியது வவுனியா நகரம்
21.08.2021 07:00:36
நாடாளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கை முழுமையாக முடங்கியது.
இந்நிலையில் வவுனியாவில் அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஒருசில மருந்தகங்கள் திறக்கப்பட்டிருந்தது.
இதேவேளை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டமையால் மரக்கறி வியாபாரிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், மரக்கறி வகைகள் பழுதடையும் நிலையம் ஏற்ப்பட்டுள்ளது.