சுரங்கத்தில் சிக்கியிருப்போரை மீட்பதில் சிக்கல் - உத்தரகாண்ட்

12.02.2021 09:37:46

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் தௌலிகங்கா ஆற்றின்  நீரோட்டம் திடீரென அதிகரித்ததன் காரணமாக, மீட்புப் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக  மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டதாகவும், ஆற்றில் நீரோட்டம் குறைந்தபிறகு மீட்புப் பணிகள் மீண்டும் நடைபெற்றதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், பாதுகாப்பு கருதி குறைந்த எண்ணிக்கையிலான மீட்புப் படை வீரா்களே பணியில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆற்றில் நீரோட்டம் அதிகரிப்பதற்கு முன்பாக, சுரங்கத்தில் துளையிட்டு உள்ளே செல்வதற்கான பணிகளில் மீட்புப் படையினா் ஈடுபட்டு வந்தனா். எனினும், அப்பணிகளுக்குத் தற்காலிகமாக இடையூறு ஏற்பட்டது.

சுரங்கத்துக்குள் சகதி உலா்ந்த நிலையில் உள்ளதால், துளையிடும் பணிகள் தாமதமடைந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.