கோட்டாபய ராயபக்ச அகுரேகொட இராணுவத் தலைமையகத்துக்கு விஜயம்!

04.08.2021 04:00:00

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , அகுரேகொட இராணுவத் தலைமையகத்துக்கு, நேற்று  முற்பகல் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இராணுவத் தலைமையக வளாகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதியை, பாதுகாப்புப் பணிக்குழாம் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா வரவேற்றார். இதன்போது ஜனாதிபதிக்கு விசேட இராணுவ மரியாதையும் அளிக்கப்பட்டது.

இதன்போது, எயார் மொபைல் படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே, எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.

அது குறித்த தகவல்கள் அடங்கிய நூல் மற்றும் ஜனாதிபதி விஜயத்தை நினைவுகூரும் நினைவுச் சின்னம் என்பவற்றை, ஜனாதிபதிக்கு இராணுவத் தளபதி வழங்கினார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விமானப் படையணியின் மின் நூலை, இணையத்தில் பதிவேற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவத் தலைமையகத்தின் செயற்பாட்டுப் பிரிவையும் திறந்து வைத்தார்.

அத்துடன், இராணுவ வளாகத்தில் அமைந்துள்ள நூதனசாலை உள்ளிட்ட பல இடங்களையும், ஜனாதிபதி பார்வையிட்டார்.