காவல்நிலைய பொறுப்பதிகாரியை தாக்கிய குற்றச்சாட்டில் மேலும் சிலர் கைது!
06.08.2021 06:36:06
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, மஹரகம காவல்நிலைய பொறுப்பதிகாரியை தாக்கிய குற்றச்சாட்டில் மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அத்துடன், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தின் தலைவர் அமில சந்தீப ஆகியோர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.