குரங்கம்மை நோய் தொற்றினால் உலகளவில் இதுவரை 219 பேர் பாதிப்பு

29.05.2022 07:13:23

குரங்கம்மை நோய் தொற்றினால் உலகளவில் இதுவரை 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் இருந்து 71 பேரும், ஸ்பெயினில் இருந்து 51 பேரும், போர்த்துக்கலில் இருந்து 37 பேரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குரங்கம்மை நோயின் பெரும்பாலான தொற்றுகள் ஆப்பிரிக்க கண்டத்தில் பதிவாகியுள்ளன.

எனினும், இந்த வைரஸ் மக்களை பெரியளவில் பாதிக்காது என சுகாதாரத்துறை பிரிவினர் கூறுகின்றனர்.