முல்லைத்தீவில் தமிழ் அரசியல்வாதிகளை கொலை செய்ய முயற்சித்த நபரால் பரபரப்பு

09.12.2023 11:16:00

முல்லைத்தீவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்களை பின்தொடர்ந்த நபரை, மக்கள் பிடித்து மாங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (08.12.2023) இடம்பெற்றுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாங்குளம் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் இருவரை கொலை செய்ய முயன்ற நபரே இவ்வாறு மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர்.

சற்று நேரத்தில் அவர் தன்னை உருமறைப்பதற்காக ஒட்டியிருந்த தாடி கழன்றுள்ளது. இதையடுத்து அவர் தப்பியோடி வீதியால் சென்ற இ.போ.ச பேருந்தில் ஏறமுயற்சித்த போது அவர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.

இதன் போது அவரிடமிருந்து ஒன்றரை அடி நீள வாள், கயிறு மற்றும் சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.