தென்னிந்தியாவின் மிகப்பெரிய கட்சி தவெக.
தமிழக அரசியல் வரலாற்றில் மிகக் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று, ஒட்டுமொத்த தென்னிந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற உன்னத கொள்கையோடு களமிறங்கியுள்ள இக்கட்சி, தற்போது தென்னிந்திய அரசியல் களத்தில் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.
தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட அரசியல் கட்சிகளிலேயே மிக அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சியாக தமிழக வெற்றி கழகம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. கட்சி தொடங்கப்பட்ட சில காலத்திற்குள்ளேயே சுமார் 2 கோடிக்கும் மேல் உறுப்பினர்களை கடந்து, தென்னிந்தியாவின் முதல் கட்சி என்ற அசாத்திய பெருமையைத் தவெக பெற்றுள்ளது.
இந்த அசுர உறுப்பினர் சேர்க்கை, தமிழக மக்கள் தவெகவின் மீதும் அதன் தலைவர் விஜய் அவர்கள் மீதும் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையையும், மாநிலத்தில் அவர்கள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றத்தையும் மிகத் தெளிவாகக் காட்டுகிறது. இளைஞர்கள், பெண்கள் மற்றும் சாமானிய மக்களின் பேராதரவோடு பட்டிதொட்டியெங்கும் பரவி வரும் தவெகவின் இந்த அசுர வேகம், பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.