
எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
01.07.2025 08:45:12
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகரித்துள்ளது. |
லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாயாகும். மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலை 7 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 185 ரூபாயாகும். மேலும் 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லிட்டரின் விலை 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 305 ரூபாயாகும். இந்நிலையில், லங்கா ஐஓசி நிறுவனமும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய, எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது. |