வவுனியா பல்கலைக்கழகத்திற்கு இராஜாங்க அமைச்சர் விஜயம்!
15.08.2021 15:30:27
வவுனியா பல்கலைகழகத்தினை நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இன்றையதினம் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.
ஓகஸ்ட் மாதம் 1ம் திகதி வவுனியா வளாகம் பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் வவுனியா பல்கலைகழகத்தினை இன்றைய தினம் நேரடியாகச் சென்று பார்வையிட்டதோடு, இப் பல்கலைக்கழகத்திற்கான அபிவிருத்திப்பணிகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்ததுடன், எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய அபிவிருத்தி பணிகள் தொடர்பாகவும் பல்கலைக்கழக நிர்வாகத்துடன் கலந்துரையாடியிருந்தார்.
பல்கலைகழகத்தின் துணைவேந்தர் ரி. மங்களேஸ்வரன் தலைமையில் பல்கலைகழகத்தின் நிர்வாகிகள் மற்றும் அமைச்சரின் இணைப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.