தம்பி ராமையா மீது காவல் நிலையத்தில் புகார்

07.01.2022 08:10:11

 

நடிகர் தம்பி ராமையா மீது சரவணன் என்ற தயாரிப்பாளர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில், 2015ம் ஆண்டில் நடிகர் உமா பதியை ராமையாவை வைத்து படம் தயாரிப்பதற்கு தம்பி ராமையாவை அணுகியிருந்தேன்.

அப்போது படத்தின் தயாரிப்பு பொறுப்பு அனைத்தையும் தான் மேற்கொள்வதாக நடிகர் தம்பிராமையா உறுதியளித்திருந்தார். ஆனால் அந்த படம் 5 வருடங்களாக தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் 2020ல்தான் முழுமை பெற்றது. ஆனபோதிலும் படம் இன்னும் வெளியாகவில்லை.

காரணம் தம்பி ராமையாவும் படத்தின் நாயகனாக அவரது மகன் உமாபதியும் படம் வெளிவருவதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அதன் காரணமாக தனக்கு இரண்டு கோடிகள் நஷ்டமானதாக தயாரிப்பாளர் சரவணன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

அதோடு படம் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதே என்று தம்பி ராமையாவிடத்தில் கேட்டால், தன்னை மிரட்டுவதாகவும் அந்த புகாரில் தெரிவித்து இருக்கிறார். இந்த புகாருக்கு தம்பி ராமையா தரப்பிலிருந்து எந்தமாதிரியான விளக்கம் வெளியாகப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.