நடிகர் சேரனின் தாயார் கமலா பாண்டியன் காலமானார்!
25.05.2026 15:23:48
|
பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோ கிராப், தவமாள் தவமிருந்து உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் தான் சேரன். படங்கள் இயக்குவதை தாண்டி பல இயக்குனர்களின் படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட சேரன் நன்றாக விளையாடி இருந்தார். |
|
தற்போது மீண்டும் சேரன் படங்கள் இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில் சேரன் வீட்டில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது 84 வயதான அவரது தாயார் கமலா பாண்டியன் இன்று காலமானார். அவரின் இறதிச்சடங்கு நாளை சொந்த ஊரான மேலூரில் நடைபெற உள்ளதாம். |