
அஜித்துடன் மீண்டும் இணையும் அனிருத்.
04.08.2025 07:13:00
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்குமார் கூட்டணியில் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வௌியாகி வெற்றி பெற்றிருந்தது.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாவதாக ஆதிக் ரவிச்சந்திரன் அண்மையில் உறுதி செய்தார்.
இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் என்பவர் தயாரிக்கிறார்.
தற்போது இந்த புதிய படத்திற்கு இசையமைக்க அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம் ஆதிக் மற்றும் அனிருத் கூட்டணி முதல் முறையாக இணையவுள்ளது.
அதேநேரம் அஜித், அனிருத் கூட்டணி நான்காவது தடவையாகவும் இணைகிறது.
ஏற்கனவே அஜித், அனிருத் கூட்டணி‛வேதாளம், விவேகம், விடாமுயற்சி' ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளது.