
ரஜினியின் ‘கூலி’ படத்தின் லுக் டெஸ்ட் புகைப்படம்.
27.06.2024 07:05:00
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் கூலி படத்தின் லுக் டெஸ்ட் புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளதை அடுத்து அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் இந்த புகைப்படம் காலா படத்தில் இடம்பெற்ற ரஜினியின் லுக் போலவே இருக்கிறது என்று கலாய்த்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக இணையும் கூலி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் ரஜினியின் நண்பராக சத்தியராஜ், ரஜினியின் மகளாக ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்க இருக்கும் நிலையில் வேறு சில வெளி மாநில நட்சத்திரங்களும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.