
அரசியல் இருந்து ஒதுங்க தயார்
ஒற்றையாட்சி அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் அதன்பின் தேசியம் பேசி பயனில்லை எனவும் தானும் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் வடக்கு மாகாண ஊடகவியலாளர்ளுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று (28) இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிக்கையில், “தற்போதைய அரசாங்கமானது அறுதிப் பெருமபான்மையுடன் உள்ளது இந்த அரசாங்கம் மக்கள மத்தியில் தனது இருப்பை தக்க வைக்க ஏதாவது செய்ய வேண்டியுள்ளது.
அதனடிப்படையில் விரைவாக ஒரு அரசியலமைப்பை கொண்டு வர வாய்ப்புள்ளது அறுதிப் பெரும்பான்மையுடன் இருப்பதால் இந்த அரசாங்கம் கொண்டு வரும் அரசியலமைப்பை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும்.
வடக்கு - கிழக்கு ரீதியில் 19 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் அதில் தேசியம் என்ற அடிப்படையில் 10 பேர் இருக்கின்றோம்.
குறைந்த பட்சம் இந்த அரசாங்கம் கொண்டு வரும் ஒற்றையாட்சி அரசியலமைப்பை தேசியம் பேசுகின்ற 10 பேராவது எதிர்க்காவிட்டால் தமிழ் தேசிய கட்சிகளின் ஆதரவுடன் இரு நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும், அதன் பின் நாம் தேசியம் பேசி பயனில்லை.
தேசிய இனப்பிரச்சனை
குறிப்பாக இலங்கை சுதந்திரமடைந்ததில் இருந்து 3 அரசியலமைப்பு சீர்திருத்தங்களை எமது தமிழ் தலைமைகள் எதிர்த்து வந்துள்ளனர் அதன் காரணமாகவே தமிழ் தேசிய இனப் பிரச்சனை இன்னும் தீர்க்கப்பட வில்லை என்ற நிலை சர்வதேச சமூகம் மத்தியில் உள்ளது.
நாம் புதிய அரசியலமைப்பை தமிழ் தேசிய் கட்சிகள் ஏற்றுக் கொண்டால் 76 வருடமாக தமிழ் தலைமைகளும், விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களன் அபிலாசைகளுக்காக செய்த அத்தனை தியாகங்களும் வீணாகிவிடும்.
எனவே, தமிழ் தேசிய கட்சிகள ஒன்று சேர்ந்து ஒற்றையாட்சி அரசியலமைப்பை எதிர்த்து வடக்கு - கிழக்கு தமிழர் தேசம் என அங்கீகரிக்கப்பட்ட, தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையுடன கூடிய ஒரு அரசியலமைப்பை கோர வேண்டும்.