மோடியைச் சந்தித்தார் நாமல்!

09.04.2025 08:17:25

டில்லியில் நடைபெற்ற 2025 ரைசிங் பாரத் உச்சி மாநாட்டில் பிராந்திய தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் நிபுணர்கள் பங்கேற்றனர்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தமை குறித்து தனது xதள பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவரது உறுதியான தலைமையின் கீழ் இந்தியா நவீன உலகில் உயர்ந்த சிகரங்களை எட்டியுள்ளது, அதன் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.“ என பதிவிட்டுள்ளார்.