விமானத்தில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட ஈரானிய கொள்ளையர்கள்

05.08.2023 18:46:28

பாண்டி லட்சுமி மடிப்பாக்கம், பிள்ளையார் கோவில் தெருவில் கண்ணாடி கடையில் வேலை செய்து வருகிறார். கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னை: சென்னை, மடிப்பாக்கம், கல்யாண கந்தசாமி தெருவைச் சேர்ந்தவர் பாண்டி லட்சுமி, இவர், மடிப்பாக்கம், பிள்ளையார் கோவில் தெருவில் கண்ணாடி கடையில் வேலை செய்து வருகிறார். பாண்டி லட்சுமி கடையில் இருந்தபோது, 2 பேர் கடைக்கு வந்து கண்ணாடி வாங்குவதுபோல நடித்து, அவரது கவனத்தை திசை திருப்பினர். இதையடுத்து அவர் அணிந்திருந்த 5 பவுன் செயினை திருடிச் சென்றனர். இதுகுறித்து, மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து, அதில் பதிவாகி இருந்த குற்றவாளிகளின் அடையாளங்களை கொண்டு தீவிர விசாரணை நடத்தினர். இதில் குலாப், சக்லன் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3½ சவரன் தங்க நகைகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.