இரண்டாவது டெஸ்ட்: தென்னாபிரிக்கா ஆரம்பமே தடுமாற்றம்!
மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்படி நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் தென்னாபிரிக்கா அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ஆட்டநேர முடிவில் குயிண்டன் டி கொக் 59 ஓட்டங்களுடனும் வியான் முல்டர் 2 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
சென். லூஸியா மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் சார்பாக, டீன் எல்கர் 77 ஓட்டங்களுடனும் எய்டன் மார்கிரம் ஓட்டமெதுவும் பெறாதநிலையிலும், கீகன் பீட்டர்சன் 7 ஓட்டங்களுடனும் வெண்டர் டஸன் 4 ஓட்டங்களுடனும் கைல் வெர்ரெய்ன் 27 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், செனோன் கெப்ரியல் 2 விக்கெட்டுகளையும் கெமார் ரோச், ஜெய்டன் சீல்ஸ் மற்றும் கெய்ல் மேயர்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இன்னமும் 5 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாவது நாளை தென்னாபிரிக்கா அணி இன்று தொடரவுள்ளது.