ஜெயிலர் 2-வில் அசத்தலான வேடத்தில் ஷாருக்கான்!.

20.02.2026 14:56:58

கூலி படத்திற்கு பின் ரஜினி நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர் 2. இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஏராளமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஏனெனில் ஒரு பல மொழிகளில் இருந்தும் நடிகர்களை தூக்கிவந்து நடிக்கவைத்து பேன் இண்டியா படமாக மாற்றி வசூலை அள்ளவேண்டும் என கணக்கு போட்டிருக்கிறார்கள்.
 

அந்த வகையில் முதல் பாகத்தில் நடித்த சிவ்ராஜ் குமார், மோகன்லால் ஆகியோர் கேமியோ வேடத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.. இதுபோக விஜய் சேதுபதி, சந்தானம், யோகி பாபு என பெரிய லிஸ்ட்டே இருக்கிறது..

இந்நிலையில்தான், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளது தெரியவந்திருக்கிறது.. இந்த படத்திற்கு ஷாருக்கான் ஒரு வாரம் கால் சீட் கொடுத்திருப்பதால் கண்டிப்பாக அவர் முக்கியமான வேடத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. அடுத்த மாதம் ஷாருக்கான் நடிக்கும் காட்சிகளுக்கான ஷூட்டிங் துவங்கவிருக்கிறது.. ஷாருக்கான் இணைந்திருப்பதால் ஜெயிலர் 2 படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது..